Saturday 6 September 2014

பேசா(Payza) கணக்கை தயார் செய்துகொள்ளுங்கள்

முதலில் உங்களுக்கு ஒரு பேசா அக்கொண்ட் (கணக்கு) வேண்டும். பேசா என்பது ஒரு வெப்சைட். இணையத்தில் இந்த வெப்சைட் ஒரு வங்கி போல செயல்படுகிறது. நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
  1. http://www.payza.com என்ற முகவரிக்கு செல்லுங்கள்
  2. வெப்சைட் லோடானதும், 'Sign Up Now' என்ற பட்டனை அழுத்துங்கள்
  3. இப்பொழுது 'Starter' என்ற தொடுப்பை தேர்வு செய்யவும்
  4. பதிவு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, 'Next' என்ற பட்டனை அழுத்துங்கள்
  5. இரண்டாவது படிவத்தையும் சரியாக பூர்த்தி செய்யவும்.
  6. இரண்டாவது படிவத்தில் கவனத்திற்குரியவை: 'Transaction pin' என்பது இன்னொரு பாஸ்வேர்டு போன்றது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள கூடிய எண்களை இக்கட்டத்தில் பூர்த்தி செய்யுங்கள். 'Third Party Information' என்ற விண்ணப்பத்தில் 'No' என்று தேர்வு செய்யவும். எல்லாம் முடிந்தபிறகு, 'Final Step' என்ற பட்டனை அழுத்துங்கள்.
  7. இப்பொழுது, கணக்குப்பதிவு படிவத்தில் நீங்கள் கொடுத்த உங்கள் ஈமெயில் முகவரிக்கு பேசா ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அந்த மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள தொடுப்பை சொடுக்குங்கள், உங்கள் பேசா கணக்கு உடனடியாக ஆக்டிவேட் ஆகிவிடும்.
இப்பொழுது இந்த ஈமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் கொண்டு உங்களது பேசா கணக்கை லாகின் செய்யலாம். இந்த பேசா அக்கௌண்ட் ஒரு பேங்க் அக்கௌண்ட் போன்றது. இணையத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்த பேசா கணக்கில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஆன்லைன் வேலை வழங்குகின்ற ஒரு வெப்சைட்டில் நீங்கள் இரண்டு டாலர் (2$) சம்பாதித்து இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு அப்பணம் தேவைப்படும் போது, 'Withdraw', 'Cashout', 'Payment', 'Payout' என்று எதாவது தொடுப்பு அந்த வெப்சைட்டில் இருக்கிறதா என பாருங்கள். கண்டிப்பாக இருக்கும், அதனை சொடுக்குங்கள். உடனே ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் Payment Mode/Payment Option என்ற கட்டத்தில் 'PAYZA' என தேர்வு செய்து உங்களது பேசா அக்கௌண்டை லாகின் செய்ய நீங்கள் பயன்படுத்தும் ஈமெயில் முகவரியை சமர்ப்பியுங்கள். நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் பேசா அக்கௌண்டிற்கு வந்துவிடும். இப்படியே நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் பேசா கணக்கில் சேர்த்து வைத்து கொண்டே வாருங்கள். பேசா கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள பேசாவில் லாகின் செய்து 'Withdraw Funds' என்ற தொடுப்பை அழுத்துங்கள். அதில் பணத்தை எவ்வாறு பெறலாம் என வழிகள் பட்டியல் இடப்பட்டிருக்கும் (உதாரணத்திற்கு பேங்க், செக், மணி ஆர்டர் - உங்களது நாட்டை பொருத்து மாறும்). அதில் உங்களுக்கு தேவையான வழியைத் தேர்வுசெய்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் உங்கள் நாட்டுப் பணமாகவே வந்துவிடும். அல்லது நீங்கள், உங்களது பேசா அக்கௌண்டிலேயே பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே இருக்கலாம். அதில் உள்ள பணத்தை கொண்டு வெப்சைட், சாப்ட்வேர், சி.டி, புத்தகம், பொருள் வாங்குவது... என இணையத்தில் ஷாப்பிங்க் கூட செய்யலாம். நீங்கள் விரும்பினால் உங்களது பேசா அக்கௌண்டில் சேர்ந்த பணத்தை இணையத்திலேயே முதலீடு செய்து இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம் (இது குறித்து கீழே செய்திகள் உள்ளன). பேசா அக்கௌண்டில் எவ்வளவு பணத்தை சேமிக்கிறோமோ அவ்வளவும் லாபம் தான். இணையத்தில் சம்பாதிக்க கண்டிப்பாக இதெல்லாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் ஆன்லைன் வேலைகளுக்கு புதியவர் என்றால் இதெல்லாம் பார்க்க பெரிய வேலைகள் போல தெரியலாம், எனினும் நீங்களாகவே செய்துபார்க்கும் போது நன்றாக புரிந்துகொள்வீர்கள். இப்பொழுது பேசா என்றால் என்ன என்று ஒரு மேலோட்டமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். அதனை புரிய வைக்கத்தான் இத்தனை விளக்கங்களும் :-)

(பேபால் என்ற இன்னொரு முக்கியமான‌ இணையவங்கி பற்றி இத்தொடுப்பில் அறியவும்) வேலைகளைக் காணலாம் வாருங்கள்...